கன்னியாகுமரியில் புத்தாண்டின் சூரிய உதயத்தை பார்த்து ரசித்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

2025ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, புத்தாண்டை வரவேற்க தயாராகி வரும்வேளையில், இந்தாண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

முக்கடலும் சங்கமிக்கும்  கன்னியாகுமரியில், இந்தாண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காலை முதலே குவிந்தனர். மாலை ஆறு முப்பது மணியளவில்  சூரியன் செந்நிறக் கோளமாக,  கடலில் மெல்ல மறைந்த அற்புத காட்சியையும் கண்டு ரசித்தனர். மேலும் அந்த ரம்மியமான தருணத்தை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

அதேபோல் கோவா மாநிலத்தின் புகழ்பெற்ற மிராமர் கடற்கரையில், இந்தாண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காண வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அரபிக்கடலின் அலையோடு சூரியன் மெல்ல மறைந்த அந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில், புனித நீராடிய பக்தர்கள் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தனர்.

அதேபோல் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயிலிலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜெகநாதரின் கொடி பறக்கும் கோபுர உச்சியில் சூரியன் மெல்ல மறைந்த அஸ்தமன காட்சியை கண்டு பரவசமும் அடைந்தனர்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் சூரியன் அஸ்தமனமானபோது, வானம் செந்நிறமாக மாறி நதிநீரில் பிரதிபலித்த தருணத்தை ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.


Night
Day