வலிமையான, செழிப்பான இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day