இது 1962-ம் ஆண்டு இந்தியா அல்ல என்பதால் சீனா பதறுகிறது - கிரண் ரிஜுஜூ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தற்போதைய இந்தியா 1962-ம் ஆண்டின் இந்தியா அல்ல என்பதால், சீனா பதற்றத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனாவுக்கு பதிலடி தருவதோடு, காங்கிரஸ் கட்சியை பழித்தும், மோடியை புகழ்பாடியும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜீ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். எல்லைப் பகுதிகளை இந்தியா மேம்படுத்தக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்த சீனா, காங்கிரஸ் அரசாங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், காங்கிரஸின் எல்லைக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைகீழாக மாற்றியதால் சீனா பதறுவதாகவும் கூறினார். இந்தியா தானாக யாருக்கும் பிரச்சனைகளை உருவாக்காது எனவும், இருப்பினும்  நமக்கு வலிய தொந்தரவு தந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் தயங்காது என கிரண் ரிஜிஜூ கூறினார்.

varient
Night
Day