ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஓட்டுநரில்லா பறக்கும் டாக்சிக்கு சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியில் இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஓட்டுநரில்லாமல் இயங்கும் இவ்வகை டாக்சி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 10 ஆயிரம் அடி உயரத்திலும் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சமாளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள டாக்சிக்கு சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், இவை இந்தாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day