கர்நாடக வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட அம்மாநில காவல்துறையினர்,

தமிழக சகோதரர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். தாவணகெரே மாவட்டம் நியாமதி நகரில் உள்ள ஸ்டேட் வங்கியில் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி லாக்க​​ரை உடைத்து, அதில் இருந்த 30 லட்ச ரூபாய் ரொக்கம், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வங்கி உயர் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், நியாமதி காவல்துறையினர், வழக்‍கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மதுரையில் ஒரு தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்ட காவல்துறையினர், முக்கிய குற்றவாளி விஜய் குமார், அஜய், உள்ளிட்ட 6 பேரை  கைது செய்தனர்.

varient
Night
Day