விரைவில் இந்தியா வருகிறார் நாசா ​​விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய வி​ண்வெளி வீராங்கனை  சுனிதா வில்லியம்ஸ் வி​ரைவில் இந்தியா வர உள்ளார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் வெறும் ஏழு நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், அங்கு நிகழ்ந்த எதிர்பாராத சில சம்பவங்களால் அவர் 8 மாத காலம் சர்வதேச விண்வெளி மையத்திலேயே இருந்து தொடர்ச்சியாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். விண்வெளியில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சுனிதா மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த மாதம் 19ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். 

மருத்துவச் சிகிச்சைக்‍கு பின்னர் ஓய்வில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் வாஷிங்டனில் சக ​வீரர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விரைவில் தனது தந்தை நாடான இந்தியாவுக்‍கு செல்ல உள்ளதாக குறிப்பிட்டார். விண்வெளியில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா ​​மிகவும் அற்புதமாக இருந்ததாக குறிப்பிட்டார். இந்தியாவின் கடற்கரைகள் முதல் பிரமாண்டமான இமயமலை வரை எல்லாமே அழகாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தனது விண்வெளி அனுபவத்தை இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள தாம் ஆர்வமாக இருப்பதாகவும்,  நீண்ட காலமாக விண்வெளியில் கால் பதிக்க முயலும் இந்தியாவுக்கு தாம் உதவ விரும்புவதாக குறிப்பிட்டார். சுனிதா பிறந்து வளர்ந்தது அமெரிக்‍காவாக இருந்தாலும் அவரது தந்தையின் பூர்வீகம் இந்தியா தான். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன் கிராமம் தான் சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா பிறந்து வளர்ந்த இடம் என்பது குறிப்பிடத்தக்‍கது. 

Night
Day