இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது. அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...