கடும் பனிமூட்டத்தால் பற்றி எரிந்த பேருந்துகள் - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கடும் பனிமூட்டத்தால் 6 பேருந்துகள் மற்றும் 2 கார் தீபிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் பனிமூட்டத்தால் டெல்லி - ஆக்ரா இடையேயான நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. 

அதிகாலையில் நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக 6 பேருந்துகள் மற்றும் 2 கார் மோதி ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பேருந்துகள் மோதிய வேகத்தில் 8 வாகனங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. விபத்தின் போது பயணிகள் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் தீ மளமளவென வேகமாக பரவி அதில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அப்பகுதி மக்களும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் சிக்கி  4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததால், பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

Night
Day