எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத் மாநில் அகமதாபாத்தில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் குடியிருப்பதற்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏராளமான வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றினர்.
குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6 ஆயிரத்து 500 பேரை கண்டறிந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 450 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உறுதியானதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சந்தோலா ஏரி பகுதியில் அவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. முன்னதாக அந்த குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வீடுகள் இடிக்கப்பட்ட சூழலில், கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.