ஆயுதத் தயாரிப்பை விரிவுபடுத்தும் ரஷ்யா - சீனா உதவி : அமெரிக்கா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனுடனா போா் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஆயுதத் தயாரிப்பை விரிவுபடுத்துவதற்கு சீனா உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்துக் கூறியுள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள்,  சோவியத் காலத்துக்குப் பிறகு முதல்முறையாக தனது ராணுவத்தை ரஷ்யா பிரம்மாண்டமாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்காக அந்த நாட்டின் ஆயுத, தளவாட உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்படுவதாகவும் இதில், சீனா மிக முக்கிய பங்காற்றி வருவதாகவும் கூறியுள்ளனர். ரஷ்யாவின் ராணுவ தளவாட உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு சீனா பல்வேறு வகைகளில் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Night
Day