எங்கு பார்த்தாலும் கழிவுநீர், மழைநீர்... அவலநிலையில் கோயம்பேடு சந்தை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் ஆங்காங்கே சரியாக பணிகள் நடைபெறாததால் மழைநீர் தேங்கி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாமல் இருப்பதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. விளம்பர திமுக அரசின் அவலம் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

விளம்பர திமுக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டும் நடைபெறும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளால் மக்கள் படும் அவதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நிதி ஒதுக்கப்பட்டும் அரைகுறையாக நடந்துவரும் இந்த பணிகளால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கும் அவலநிலை காணப்படுகிறது.

இந்த சீர்கேட்டுக்கு முக்கிய உதாரணமாக இருக்கிறது ஆசியாவிலேயே மிகப் பெரிய சென்னை கோயம்பேடு வணிக வளாகம். கோயம்பேடு சந்தைக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சில்லறை வியாபாரிகள் தினந்தோறும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இப்படி எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு வணிக வளாக பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் சரிவர நடைபெறாததால், சந்தை முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
 
உரிய பராமரிப்பு இல்லாததால் கோயம்பேடு வணிக வளாகத்தை சுற்றிலும் உள்ள பள்ளங்களில் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. கோயம்பேடு சந்தைக்கு வாகனங்கள் வந்து, செல்ல ஒரு வழி மட்டுமே இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சென்னை பெருநகரர வளர்ச்சி குழுமத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கோயம்பேடு சந்தை பகுதியில் கழிவுநீர் சாலையின் இருபுறமும் குளம் போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சந்தையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அந்தக் கழிவு நீரிலேயே நடந்து சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை என்பதும் அப்பகுதி மக்களின் ஆதங்கம். குப்பைகளும் டன் கணக்கில் கொட்டப்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரில் குப்பைகளும் ஒன்றாக கலந்து கிடப்பதால் வாழத் தகுதியற்ற பகுதியாக கோயம்பேடு சந்தை பகுதி மாறியுள்ளது. சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் இந்த பகுதியை உடனடியாக சரி செய்து, பிரச்னைக்கு விளம்பர திமுக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மெத்தனத்தால் கோயம்போடு சந்தையில் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வருடம் தோறும் பராமரிப்பிற்காக பணம் வசூலிக்கப்பட்டாலும் எந்த பணியும் நடப்பதில்லை என்று குற்றம் சாட்டும் வியாபாரிகள், இனியாவது இந்த பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Night
Day