இந்தியா
வீழ்ச்சி அடைந்த பொருளாதார நாடு இந்தியா- டிரம்ப் சர்ச்சை கருத்து...
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
மதத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாரத ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நாகாலாந்து மாநிலம் கொஹிமாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், தங்களையும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் எனக் கூறுகிறார்களே? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, மதத்தை உண்மையாகவே நேசிப்பவர்கள், அதை தனிப்பட்ட முறையில் தங்களுடன் மட்டுமே வைத்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்தார். பொது வெளியில் மதத்தை தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்பவர்கள், அதை வைத்து ஆதாயம் தேட முயற்சி செய்வார்கள் என்று கூறிய ராகுல் காந்தி, இந்து மதத்தை தனது வாழ்வில் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார். வெறுப்பை என்றுமே விதைத்ததில்லை என்ற ராகுல் காந்தி, அது தான் இந்து மதத்தின் தன்மை என்றார்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து இந்திய...