ராகுல்காந்தியுடன் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை  இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்தனர் . பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் உடல் எடை அதிகரிப்பால் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதியிழப்பு செய்யப்பட்டார். அதையடுத்து, சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று தனது முழு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் சேர்ந்து வினேஷ் போகத் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனிடையே, அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day