பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


சேலம் மாவட்டம் பருத்திக்காடு அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனுக்கு சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் பட்டாசு மருந்து பண்டலை கொண்டு வந்ததாகவும், அதனை கீழே இறக்கும் போது உராய்வு காரணமாக வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

varient
Night
Day