விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்மரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி வரும் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்காக சிறு விநாயகர் சிலைகள் முதல் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. சிலை தயாரிப்பில் ரசாயனம் கலக்கப்படுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

varient
Night
Day