டிச. 27ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - திமுக அரசுக்குதூய்மை பணியாளர்கள் எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 27-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக விளம்பர திமுக அரசுக்கு எதிராக போராடி வரும் தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயிலும் அலட்சியம் காட்டும் திமுக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி 147 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று மூன்றாம் கட்ட உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டப் போராட்டங்களில் ஈடுபட்ட பணியாளர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 4 பெண் தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஒன்று வேலையை கொடுங்கள், இல்லாவிட்டால் தங்களை சிறையில் அடையுங்கள் என தூய்மை பணியாளர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். மேலும் விளம்பர திமுக அரசை கண்டித்து வரும் 27-ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாகவும் தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Night
Day