முடங்கும் Paytm - ஆர்.பி.ஐ. உத்தரவால் வாடிக்கையாளர்கள் கலக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-


Paytm வங்கியின் செயல்பாடுகளை வரும் 29-ம் தேதிக்குள் முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு கடந்த 2022-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி செய்த தணிக்கையில் தொடர் விதி மீறலில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து , பேடிஎம்-ல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பண பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை வரும் 29-ம் தேதியுடன்  நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், பேடிஎம் வாலட்களில் ஏற்கனவே உள்ள தொகையை பயன்படுத்தவும் பேடிஎம் யுபிஐ சேவைகளை பயன்படுத்தவும் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day