பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6ஆம் நாளான இன்று உறுப்பினர்களின் கேள்வி - பதில் மற்றும் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது, வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழை தவிர்த்து பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர், அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இனி அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

varient
Night
Day