பெங்களூரு குண்டு வெடிப்பு : மேலும் 2 காட்சிகளை கைப்பற்றிய என்ஐஏ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மேலும் 2 கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

பெங்களூருவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வைட் பீல்டு என்ற பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கேப் உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 10 காயமடைந்தனர். இது வீரியமற்ற குண்டு வெடிப்பு என்ற உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழக்கானது என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், தொப்பி அணிந்த மர்ம நபர் உணவகத்திற்குள் சென்றுவிட்டு அவசர அவசரமாக வெளியேறும் 2 கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day