பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் மின்சாரம் இலவசம் - முதலமைச்சர் நிதிஷ்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இதன்மூலம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயனடையும் எனவும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனை ஒட்டி இந்த சலுகையை நிதிஷ்குமார் அறிவித்துள்ளதாக தெரிகிறது.  

Night
Day