கர்நாடகாவில் வரும் 5-ந் தேதி முதல் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்து ஊழியர்கள் வரும் 5ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கர்நாடக மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு பேருந்து ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 7ம் தேதி போக்குவரத்து கழக சங்கங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களது கோரிக்கைகளுக்கு உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையிலும் அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகததால், ஆகஸ்டு 5-ந் தேதி முதல் அரசு பேருந்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

Night
Day