பாலாற்றில் நுரை பொங்கியபடி நீர் செல்வதால் விவசாயிகள் கவலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பாலாற்றில் நுரை பொங்கியபடி நீர் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளர். வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ரசாயன நீரை பாலாற்றில் கலக்க விடும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day