கிரிவலப் பாதையில் 14 ஏக்கரில் உள்ள ஈசானிய திடல் குப்பை கிடங்கில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாநகராட்சியில் கிரிவலப் பாதையில் 14 ஏக்கரில் உள்ள ஈசானிய திடல் குப்பைக் கிடங்கில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊழியர்கள் தீ வைத்து எரித்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ 36 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரிவதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Night
Day