சிறுமி பாலியல் வன்கொடுமை: 6 நாளாகியும் குற்றவாளியை பிடிக்க திணறும் போலீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆன பிறகும் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.

ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக கடந்த சனிக்கிழமையன்று தனது பாட்டி வீட்டிற்கு 10 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்து வந்த இளைஞர் சிறுமியின் வாயை மூடி அருகே உள்ள மாந்தோட்டத்தில் வைத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இளைஞர் தப்பித்துச் சென்றநிலையில், காயமடைந்த நிலையில் பாட்டி வீட்டுக்கு வந்த சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்ததுடன், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞரை தேடி வருகின்றனர். ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் உட்பட பொதுமக்கள் கூடும் இடத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் நடந்து 6 நாட்களாகியும் குற்றவாளியை பிடிக்க முடியமாமல் காவல்துறையினர் திணறி வருவதாக கூறப்படுகிறது. 

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்த போதிலும், போலீசார் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு கடந்த 6 நாட்களாக சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பந்தப்பட்ட நபரை 6 நாட்கள் ஆகியும் காவல்துறையினர் கைது செய்யாமல் திணறுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் இதுபோன்ற குற்றவாளிகள் சுதந்திரமாக உலவி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறை இனியும் தாமதிக்காமல், உடனடியாக குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Night
Day