இளம் பெண்ணை வழக்கறிஞர் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, நிலத்தகராறு தொடர்பாக இளம்பெண்ணை, வழக்கறிஞர் உருட்டு கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முனியன்குடிசை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரவிசந்திரன் என்பவருக்கும் இடையே நில தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த ரவிசந்திரன் மகன் வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் திடீரென கையில் வைத்திருந்த உருட்டை கட்டையால் ராமலிங்கத்தின் மகளை தாக்கியுள்ளார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் உருட்டு கட்டையால் இளம் பெண் வள்ளியை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day