குடும்ப தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்ட விவகாரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் படுகாயமடைந்த புது மணப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவரும், லாவண்யா என்பவரும் காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், தென்னரசு அடிக்கடி குடித்து விட்டு மனைவி லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 12ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை வைத்து லாவண்யாவை தென்னரசு சுட்டுள்ளார். 

இதனை தடுக்க முயன்ற தென்னரசுவின் தாய் பச்சையம்மாள், உறவினர் கார்த்தி ஆகியோரையும் ஏர் கன் துப்பாக்கியால் தென்னரசு சுட்டுள்ளார். இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த லாவண்யா மற்றும் கார்த்தியை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிக்சை பலனின்றி இளைஞர் கார்த்தி ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மணப்பெண் லாவண்யாவும் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தென்னரசுவின் தாய் பச்சையம்மாளுக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்னரசை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

Night
Day