அஜித்குமார் மரண வழக்கு: காவலர்கள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய 5 பேர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில், அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கைதான காவலர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், அதனை ஆய்வு செய்ய உள்ளனர். இந்தநிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி காவல் ஆணையரின் ஓட்டுனர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலாளியாக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளனர்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் தாக்கி உயிரிழந்த வழக்கில் விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையம் வந்த சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் வலிப்பு வந்து இறந்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவலர் ரமேஷ்குமாரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். 

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 காவலர்களையும் சிபிஐ விசாரித்ததுடன், ஏடிஎஸ்பி சுகுமாரிடம் 2 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தி உள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் அஜித் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கோப்புகள், காவல் நிலைய சிசிடி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் காவலர் ஆனந்த், அஜித்குமாரை அடித்து சித்திரவதை செய்தது வீடியோவில் பதிவாகியுள்ளதால், சிபிஐ அதிகாரிகள் அவருடைய வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்

Night
Day