நிலத்தகராறு தொடர்பாக ஒன்றரை குழந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காவல் உதவி ஆய்வாளர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் அருகே, நிலத்தகராறு தொடர்பாக ஒன்றரை குழந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காவல் உதவி ஆய்வாளர் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. குருவாலப்பர்கோவில் கிராமத்தை சேர்ந்த தவச்செல்வனுக்கும், அதே பகுதியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் அடியாட்களை வைத்து தவச்செல்வன் குடும்பத்தினரை தாக்கியதாக தெரிகிறது. இதில் தவச்செல்வனின் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது. உடனடியாக குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், விஸ்வநாதன் மீது பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குழந்தையின் தாயார் சுசி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

Night
Day