நில விவகாரத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய உறவினர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே நிலத்தகராறில் பெண் மீது உறவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த பொங்கியம்மாளுக்கு அப்பகுதியில் 10 சென்ட் நிலம் உள்ளது. அதனை அவரது சித்தப்பா மகன் ரங்கநாதன் என்பவர் ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். இதனால் பொங்கியம்மாள் தரப்பினர் கம்பி வேலி அமைக்க முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ரங்கநாதன், பொங்கியம்மாளின் மகள் கற்பகத்தை கற்களால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் ரங்கநாதனுக்கு ஆதரவாக செயல்படுவதாக பொங்கியம்மாள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day