புதுச்சேரியில் சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர்கரை தொகுதிகுட்பட்ட 4-வது வீதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பள்ளி, இடுகாடு மற்றும் கல்லறைகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையை சிரமைக்க கோரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேதமடைந்த சாலை வழியாக நடந்து சென்று புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Night
Day