பல் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்த விவகாரம்... 3 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் ஆய்வு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் பல்மருத்துவமனையில் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலின் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து 6 மாதங்களுக்கு உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் சார்பாக 3 பேர் அடங்கிய மருத்துவர் குழு வாணியம்பாடி பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவர்களின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

Night
Day