குப்பைகளுக்கு தீவைத்த மாநகராட்சி ஊழியர்கள்: சுமார் 11 மணி நேரம் பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள குப்பை கிடங்கில் தீ மளமளவௌ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. கிரிவல பாதையில் உள்ள ஈசானி திடலில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், அப்பகுதியில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்படுகிறது. இந்த குப்பைகளை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாநகராட்சி ஊழியர்கள் குப்பையில் வைத்த தீ சுமார் 11 மணி நேரமாக பற்றி எரிந்ததால் வெளியான கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியடைவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Night
Day