அந்நிய நாட்டு தயாரிப்புகளை தவிர்த்து இந்திய தயாரிப்புகளை விற்பனை செய்ய திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்நிய தயாரிப்புகளை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிய நாட்டு பானங்களை விற்பனை செய்வதை தவிர்க்க போவதாக தெரிவித்தார். இதேபோல அதிக கட்டணம் வசூல் செய்யும் உணவு செயல்களை புறம் தள்ளி தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Night
Day