எழுத்தின் அளவு: அ+ அ- அ
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர் இரண்டு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செய்யாமல் விட்டுவிட்டு, சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் உள்ள நிலையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அண்மையில் தொடங்கியது.
அதில் மகளிர் உரிமை தொகை, ஆதார் எண்ணில் திருத்தம் உள்ளிட்டவைக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
இந்த முகாம்களில் அதிக அளவில் வருவாய் துறையினர் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், குறுகிய நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாக குற்றம்சாட்டி, இன்று முதல் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், தமிழக முழுவதும் சுமார் 14 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளதால் வருவாய்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் வருமான வரி சான்று, சாதி சான்று, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு, தமிழக அரசு ஊழியர்களான வருவாய்த் துறையினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு உடனடியாக 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருவாய்துறை அலுவலர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் திருச்சி மேற்கு தொகுதி வட்டாட்சியர் அலுவலத்தில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வருவாய்த்துறை பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, பாளையங்கோட்டை நாங்குநேரி திசையன்விளை ராதாபுரம் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகங்களில் ஊழியர்கள் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் முழுவதும் வெறிச்சேடி காணப்படுகிறது. மேலும், பட்டா மாறுதல் சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.