எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் திருடு போன 3 சொகுசு கார்களில் ஒரு கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் சர்வீஸ் சென்டர்களில் விடப்பட்ட 3 சொகுசு கார்கள் திருடப்பட்டன. இதுகுறித்து உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சர்வீஸ் சென்டர்களின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். இந்த கார் திருட்டு சம்பவம் தொடர்பாக சட்டேந்திரசிங் ஷகாவாட் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருடப்பட்ட மூன்று சொகுசு கார்கள் வட இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனிடையே 3 சொகுசு கார்களில் ஒரு கார் பாகிஸ்தான் எல்லையில் காரின் பதிவு எண் மற்றும் தோற்றம் என அனைத்தும் மாற்றப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்தனர். சென்னையில் திருடப்பட்ட கார் பாகிஸ் தான் எல்லையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.