பிரபல அல்வா கடை அல்வாவில் இருந்த தேள் - அல்வா பிரியர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலியில் உள்ள பிரபல அல்வா கடையில் வாங்கிய அல்வாவில் தேள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல அல்வா கடையிலிருந்து  சுகந்தன்பு என்பவர் அல்வா மற்றும், கார மிக்சர் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.  வீட்டுக்கு சென்று அல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, அதில், தேள் இனத்தை சேர்ந்த நட்டுவாக்காலி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், ஸ்வீட்ஸ் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் எனவும் தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

Night
Day