ஐடிஐ மாணவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் ஐடிஐ மாணவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை சிலைமான் அடுத்துள்ள இளமனூர் கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தது மதுரை ஒத்தகடை பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் பிரசன்னா என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் 3 பேர் கண்மாய்க்கரைக்கு சென்றதை பொதுமக்கள் பார்த்ததாக தெரிவித்திருந்த நிலையில், அந்த 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Night
Day