அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாக அவரது தம்பி குற்றச்சாட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கையில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாக அவரது தம்பி குற்றம்சாட்டியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அடித்து சித்ரவதை செய்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 28 ஆம் தேதி அஜித்குமார் கொலை செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு, செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் கோரி அவரது குடும்பத்தினர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கேட்டப்போது திருப்புவனம் காவல்நிலையத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளனர். திருப்புவனம் காவல்நிலையத்தில் கேட்டபோது அங்கிருந்து எந்தவிதமாக ஆவணங்களும் கிடைக்கவில்லை என அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அஜித்குமார் இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நவீன்குமர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அஜித்குமாரின்  இறப்புச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து இறப்பு சான்றிதழ் வழங்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

varient
Night
Day