அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு பேருந்து மேற்கூரை மீது இளைஞர்கள் ஏறி ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகளை சோர்ந்தவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சில இளைஞர்கள் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், இளைஞர்கள் பேருந்து மீது படுத்தபடி நிறுத்துங்கள், நிறுத்துங்கள் என கதறினர். பின்னர் பேருந்து சிறிது தூரம் சென்று நின்றது. கல்விக் கண் திறந்த காமராஜ் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற அராஜக செயலில் இளைஞர்கள் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க செய்தது.

Night
Day