பிறந்த குழந்தைகளை படுக்க வைக்க கிழிந்த மெத்தைகளை வழங்கிய மருத்துவமனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தையை தரையில் படுக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் படுக்கைகள் சேதமடைந்து, கிழந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு கிழிந்து சேதமடைந்த நிலையில் உள்ள மெத்தை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் குழந்தைகளை தரையில் போர்வை விரித்து படுக்க வைத்துள்ளதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு வழங்க கூடிய தொட்டில் வழங்கவில்லை எனவும், சுகாதாரமற்ற முறையில் தரையில் பச்சிளங் குழந்தைகளை படுக்க வைத்திருப்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

மகப்பேறு மருத்துவமனையில் இருக்க வேண்டிய எந்தவித வசதிகளும் இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விளம்பர திமுக அரசின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், உடனடியாக மகப்பேறு மருத்துவமனையில் புதிய மெத்தை, தொட்டில் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

varient
Night
Day