எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மேலும் இந்த 2 மாவட்டங்களுக்கும் நாளை முதல் வரும் 21ஆம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், நாளைய தினம் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 18ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.