சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாக ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

விதிமீறலில் ஈடுபட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆட்சியர் தெரிவித்தார். அதோடு சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி அது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இனிமேல் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். கனிம வளம் நாட்டின் சொத்து, அவை கொள்ளை போகாமல் தடுப்பது அதிகாரிகளின் கடமை என அறிவுறுத்திய நீதிபதிகள், சட்டவிரோத குவாரி விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Night
Day