தமிழகத்திற்கு இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17, 18, 19, 20 ஆகிய நாட்களில் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை அய்வு மையம் விடுத்துள்ளது. இதேபோன்று இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மிதமான மழை நீடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கும் நிலையில், சில இடங்களில் மிதமான அல்லது கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Night
Day