மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு - மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று தமிழகம் வந்தார். சென்னையில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் திரௌபதி முர்மு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று திருச்சி சென்றார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருக தந்த குடியரசு தலைவரை பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் மற்றும் துணை வேந்தர் கிருஷ்ணன் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட திரௌபதி முர்மு தேசத்தை கட்டியெழுப்புவதில் இளம் பட்டாதாரிகளின் பொறுப்புகள் குறித்து உரை நிகழ்த்தினார். பின்னர் ஆயிரத்து பத்து மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Night
Day