பளுதூக்கும் போட்டி - 82 வயது மூதாட்டி கிட்டாம்பாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்ந்த மூதாட்டிக்கு, தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 82 வயதான மூதாட்டி கிட்டாம்பாள். இவர் சமீபத்தில் குனியமுத்தூரில் நடைபெற்ற 'ஸ்ட்ராங் மேன் ஆஃப் சவுத் இந்தியா' என்ற பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். 50 கிலோ எடை கொண்ட டெட் லிஃப்டை அசால்ட்டாக தூக்கிய அவர், போட்டியில் 5வது இடத்தை பிடித்து அசத்தினார். இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், கிட்டாம்பாள் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவைப் பகிர்ந்து "82 வயதில் ஒரு பெண் எடையை மட்டுமல்ல, நம் மனதையும் தூக்குகிறார்" என பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். 

varient
Night
Day