ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு: பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

படத் தயாரிப்பு நிறுவனத்திடம் 9 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் ரவி மோகனை வைத்து 2 படங்கள் தயாரிக்க திட்டமிட்டு 6 கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி மற்ற நிறுவனங்கள் படங்களில் அவர் நடித்ததால், கொடுத்த முன்பணத்தை ரவி மோகனிடம் திருப்பிக் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர் மனு தாக்கல் செய்த நடிகர் ரவி மோகன் 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும், படப்பிடிப்பை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து படத் தயாரிப்பு நிறுவனத்திடம் 9 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Night
Day