ரெட் ஜெயண்ட் மீது விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சிறிய படங்களை திரையரங்கில் திரையிட முடியாமல்  உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருவதாக விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
சிறிய படங்களுக்காக திரையரங்குகளை வழங்கக் கூடாது என ரெட் ஜெயண்ட் நிறுவனம் திரையரங்க உரிமையாளர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன். தங்கள் நிறுவனத்தின் மூலமாக திரையிடப்படும் படங்கள் மட்டுமே திரையரங்கில் திரையிடப்பட வேண்டும் என கூறுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இது போதாது என்று  பெரிய படங்களையும் ரெட் ஜெய்ன்ட்  தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வாங்கி வருவதாகவும் சினிமா பட விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விளம்பர திமுக அரசுக்கும், முதலமைச்சருக்கும் பல முறை புகார் மனு அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அண்ணாமலையார் பிலிம்ஸ் உரிமையாளரும், விநியோகஸ்தருமான மதுரம் பேசுகையில், குடும்பமே அனைத்து படங்களையும் வாங்கிக் கொண்டு அதன் மூலம் கோடி கோடியாக லாபத்தை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.  தயாரிப்பாளர்களும், வினோஸ்தர்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் சினிமா துறையை விளம்பர திமுக அரசின் குடும்பத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தால் மட்டுமே சினிமா துறையை மீட்டெடுக்க முடியும் எனவும் வலியுறுத்தினார்.

Night
Day