நடிகர் விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. தனது 48வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர்தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். எனினும் நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்ட பின்னரே திருமணம் என்று விஷால் உறுதியாக இருக்கிறார். விரைவில் இவர்களது திருமண தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

varient
Night
Day