2 நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 2 நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


4 நாள் அரசு முறை பயணத்தின் முதல் நாடாக ஜப்பான் தலைநகர் டோக்கியாவிற்கு பிரதமர் மோடி விமானம் மூலம் சென்றடைந்தார். அங்கு, அந்நாட்டு அமைச்சர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்கள், காயத்ரி மந்திரம் மற்றும் பிற மந்திரங்களை ஓதி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். அவர்கள், மந்திரங்களை ஓதும்போது, பிரதமர் மோடியும் கைகூப்பி மந்திரங்களை பாடினார்.

டோக்கியாவில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பலத்த கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்றனர். பாரத் மாதாகி ஜே எனவும், மோடி, மோடி எனவும் முழக்கம் எழுப்பிய இந்திய வம்சாவளியினருக்கு கைகூப்பி வணங்கியும், கைகொடுத்தும் பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரத நாட்டியத்தை கண்டு ரசித்த பிரதமர் மோடி, அக்குழுவினருடன் புகைப்படம் எடுத்து கலைஞர்களை பாராட்டினார்.

இந்தப் பயணத்தின் போது 15-வது இந்தியா- ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஜப்பான் இடையேயான உறவுகள் குறித்து ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். 

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 31ம் தேதி சீனா செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
 

Night
Day