ராகுல் காந்தியின் யாத்திரை... தொண்டர்கள் வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிகார் மாநிலத்தில் கடந்த 17ம் தேதி முதல் வாக்காளர் அதிகார யாத்திரையைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற உள்ள இந்த யாத்திரையில், ராகுல் காந்தியுடன், ப்ரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். யாத்திரையின் 14வது நாளான இன்று, பெட்டியா நகரில் யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு, வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 1ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ள பேரணியுடன் ராகுலின் வாக்காளர் அதிகார யாத்திரை நிறைவடைய உள்ளது. இறுதி தினத்தன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் யாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் யாத்திரை மிகுப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day